மின்சார விநியோகம், வைத்தியசாலைகள் சேவைகள் ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

மின்சார விநியோகம், வைத்தியசாலைகள் சேவைகள் ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சில சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2266/55 எனும் பெப்ரவரி 11ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, மின்சாரம் வழங்கல் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் மேலும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அவசிய அல்லது தேவைப்படும் தேவைகள், பணிகள், தொழில்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளைச் சேர்ந்த 18 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment