பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டலந்த பிரதேசத்திலுள்ள வயலில் மின்சாரம் தாக்கிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 28, 38 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (11) மின்சாரம் தாக்கி இருவர் வயல்வெளியில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கும், அங்கு சென்ற பொலிசார் குறித்த இருவரையும் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைக்காகச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெல்மதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment