ITN தலைவராக முன்னாள் எம்.பி. நிரோஷன் பிரேமரத்ன நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

ITN தலைவராக முன்னாள் எம்.பி. நிரோஷன் பிரேமரத்ன நியமனம்

மாத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) இது தொடர்பான நியமனக் கடிதத்தை, வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அளகப்பெருமவிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டதோடு, நாளையதினம் (04) அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் பிரேமரத்ன இதற்கு முன்னர் ITN தொலைக்காட்சி சேவையில் பிரபல அறிவிப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

கடந்த 2015 இல் அவர் அரசியலுக்குள் பிரவேசித்து, 2015 பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு எம்.பியாக தெரிவானார். கடந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார்.

No comments:

Post a Comment