சீமெந்து தட்டுப்பாடு மாத இறுதியில் தீரும் : கேள்வி அதிகரிப்பினால் பற்றாக்குறை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

சீமெந்து தட்டுப்பாடு மாத இறுதியில் தீரும் : கேள்வி அதிகரிப்பினால் பற்றாக்குறை

சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பலொன்று நாட்டுக்கு வரவுள்ளது. 

எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையமென சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment