போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இந்திய கைதிகளை, இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருட்களை வைத்திருந்தமை, கடத்தல் மற்றும் இறக்குமதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இரு கைதிகளில் ஒருவர் குற்றவாளி என தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த குற்றவாளிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். அதன்படி, இந்த கைதி சுமார் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.
இரண்டாவது கைதி ஆபத்தான போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர் என்று பேச்சாளர் கூறினார்.
அத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு தற்போது 06 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் இரு கைதிகளையும் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் அவர்கள் இந்திய காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment