வீட்டுக்கு பின் புறத்தில் புதிதாக வெட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலகூடக் குழிக்குள் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் ஹபரணை - ஹதரஸ்கொட்டுவை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு வருடமும் 10 மாதங்களான பாக்யா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சிறுமியின் தாய் வேலை நிமித்தம் தனது சகோதரியின் வீட்டில் சிறுமியை விட்டு சென்ற போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின் புறத்தில் புதிதாக வெட்டப்பட்ட நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என்ற பதற்றத்தில் வீட்டாரினால் குழந்தையை தேட முற்பட்ட வேளையில் குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைக்காக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment