உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
கல்முனை, பள்ளி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.
சுகவீனம் காரணமாக கடந்த நவம்பா் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர், அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த டிசம்பா் 05ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்திடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனா்.
தினகரன்
No comments:
Post a Comment