பருத்தித்துறையில் இருந்து திருகோணமலைக்கு புறப்பட்டு சென்ற இ.போ.ச பேருந்து மீது இன்று (05) அதிகாலை 4.00 மணியளவில் வல்லை புறாப்பொறுக்கி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரும் தாக்குதலுக்குள்ளாகினர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து பருத்தித்துறை சாலையில் இருந்து பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து நெல்லியடி மற்றும் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த பொலிசார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 7 மணி அளவில் இருந்து பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (04) இரவு 8.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியின் நடத்துனர் மற்றும் சாரதி மீது நெல்லியடி நகர் பகுதியில் வைத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(நாகர்கோவில் விஷேட, கரவெட்டி நிருபர்கள் )
No comments:
Post a Comment