இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும், மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி வரையில் நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

(யாழ்.விசேட நிருபர்)

No comments:

Post a Comment