உடல் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு : இரத்தினபுரியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

உடல் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு : இரத்தினபுரியில் சம்பவம்

பிராணிகளால் கடித்து குதறப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று இறக்குவானை, பொதுபிட்டிய வீதியில் றம்புக்க என்ற இடத்தில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட் டுள்ளது.

இப்பிரதேச கிராம சேவகர் வழங்கிய தகவலையடுத்து இவ்விடத்தில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சிசுவின் சடலத்தை மீட்கும் போது சிசுவின் உடற்பாகங்கள் பிராணிகளால் கடித்து சிதைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (11) இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து இரத்தினபுரி மேலதிக நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த சிசுவிற்கு உடற்பரிசோதனையை மேற் கொண்டார். 

மரண விசாரணைக்காக சிசுவின் சடலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

No comments:

Post a Comment