தடுப்பூசி போட மறுப்பது தற்கொலைக்கு சமம் : போடுவது ஒரு தார்மீக கடமை - பாப்பரசர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

தடுப்பூசி போட மறுப்பது தற்கொலைக்கு சமம் : போடுவது ஒரு தார்மீக கடமை - பாப்பரசர்

மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தடுப்பவர்களை சாடிய பாப்பரசர், தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயாஜால வழிமுறை அல்ல என்றாலும், நோயைத் தடுப்பதற்கான மிகவும் நியாயமான தீர்வு என்றும் தெரிவித்தார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான பாப்பரசர், தடுப்பூசியை அன்பின் செயல் எனவும், தடுப்பூசி போட மறுப்பது தற்கொலைக்கு சமம் என்றும் கூறி வந்தார். 

தற்போது ஒருபடி மேலே சென்று, தடுப்பூசி போடுவது ஒரு தார்மீக கடமை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனி நபர்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. இது நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கு மரியாதை அளிக்கிறது. சுகாதார பாதுகாப்பு ஒரு தார்மீக கடமையாகும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

ஆதாரமற்ற கருத்துகள் மூலம் மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தடுப்பவர்களை சாடிய பாப்பரசர், தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயாஜால வழிமுறை அல்ல என்றாலும், நோயைத் தடுப்பதற்கான மிகவும் நியாயமான தீர்வு என்றும் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் மற்றும் முன்னாள் போப் பெனடிக்ட் ஆகியோர் முழுமையாக தடுப்பூசி போட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment