வெள்ளவத்தை, தெஹிவளை பகுதி கடற்பரப்பில் மூன்று முதலைகள் : மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எச்சரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

வெள்ளவத்தை, தெஹிவளை பகுதி கடற்பரப்பில் மூன்று முதலைகள் : மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எச்சரிப்பு

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் ஆகிய கடற்பகுதிகளில் மூன்று முதலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் குறித்த முதலைகள் பிடிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முதலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெள்ளவத்தை மற்றும் கல்கிசைக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருந்து கடலுடன் இணையும் கால்வாய்கள் ஊடாக இந்த முதலைகள் வந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, கடந்த வாரம் தெஹிவளை கடற்பரப்பில் வைத்து முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார். 

இந்நிலையில், கடலில் நீராடச் செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment