பொரளையில் உள்ள தேவாலய வளாகத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (11) பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய (All Saint's Church) வளாகத்தில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேவாலய ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைக்குண்டை செயலிழக்கச் செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment