யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளார்.
(யாழ்.விசேட நிருபர்
No comments:
Post a Comment