அமைச்சிலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பினார் சுசில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

அமைச்சிலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பினார் சுசில்

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக் கருத்துகளுக்குப் பின்னர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சிற்கு சென்றிருந்த அவர், ஆவணங்களை எடுத்துக் கொண்டு அமைச்சில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறினார்.

இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்திருந்த காரணத்தினால் அவர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment