தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் வழங்கிய முன்னுரிமை காரணமாக இன்று பாடசாலைகளை முழுமையாகத் திறக்க முடிந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தடுப்பூசிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கியதாலும், ஒருங்கிணைக்கப்பட்ட நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இலவச சுகாதார சேவையை நமது நாட்டில் கொண்டிருப்பதாலும் இன்று பாடசாலைகளை திறக்கும் திறன் ஏற்பட்டுள்ளது.
மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரிக்கான மூன்று மாடிக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் வீரவன்ச, நமது நாட்டில் கல்வித்துறை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி வந்துள்ளது. இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், எமது நாடு இலவசக் கல்வி மிகவும் பாதுகாக்கப்பட்ட நாடாகும். தெற்காசியாவில் பல நாடுகளில் இது போன்ற இலவசக் கல்வி கிடையாது.
ஜனாதிபதி உட்பட எங்கள் அரசாங்கம் தடுப்பூசிக்கு மிகவும் முன்னுரிமை அளித்துள்ளதாலும் இலவச சுகாதாரத்துறை இருப்பதாலும் கொரோனா தொற்றிலிருந்து மீள முடிந்துள்ளது.
மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு முன்பிருந்தே எமது நாடு இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தையும் மரபுரிமையாகப் பெற்றது.
மிஹிந்தலையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் உலகின் மிகப் பழமையான மருத்துவமனை அமைப்பும் அது தொடர்பான கல்வி நிறுவனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எமது மாணவர்களை சிறந்த திறமையுள்ள மாணவர்களாக உருவாக்கப்பட வேண்டும். எனவே எங்கள் பிள்ளைகள் தங்கள் உயர் கல்வி வாய்ப்புகளைத் தொடர அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment