எதிர்வரும் சனிக்கிழமை (08) மு.ப. 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
ஆகிய பகுதிகளில் குறித்த காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment