அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மார்பக புற்றுநோயால் உயிரிழந்த அவரது மனைவி ஜேன் நினைவாக விளையாடப்படும் பிங்க் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுதற்கு இன்னும் நில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரானது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சியாக அவுஸ்திரேலியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மெக்ராத், அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment