உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் (CECOA) தெரிவித்துள்ளது.
2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 1.1% பேர் பார்வைக் குறைபாடுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் ஸ்தாபகரும் கண் பராமரிப்பு நிபுணருமான நரேஷ் பிரதான் தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், கண் மருத்துவ மனைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மக்களில் 80 சதவீதமானவர்கள் பார்வையை இழந்துள்ளனர். 80 சதவீதம் சேதத்திற்குப் பின்னர், பார்வையை மீட்டெடுக்க வழி இல்லை என்றார்.
தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் தொலைபேசிகளிலும் கணினிகளுக்கு முன்பும் தங்கள் நேரத்தை செலவழித்தனர். பெரும்பாலான குழந்தைகள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இணைய தளங்களைப் பயன்படுத்தி தங்கள் படிப்பைத் தொடர வேண்டியிருந்தது.
எனவே இவ்வாறான காரணங்களால் நாட்டில் பார்வையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இது பாரிய ஆபத்தானது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment