நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், கைதான முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (04) பிற்பகல் பொரளை பிரதேசத்தில் வைத்து, கடுவலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட துமிந்த நாகமுவவிற்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல கடுவலை நீதவானும், மாவட்ட நீதிபதியுமான சமத் தசநாயக்க அனுமதித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்துக்கு அருகே ஆர்ப்பாட்டம் செய்தமை ஊடாக, பொதுமக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களுக்கு பிணையளிக்கக் கோரி, கடுவலை நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
கடந்த 2021 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி நடாத்தப்பட்டிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தினிடையே, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற பெயர்ப்பலகை போன்றதொன்றை தயாரித்தமையூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமைக்காக துமிந்த நாகமுவவிற்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே அவர் இன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment