மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தேர்தலை நடத்துமாறு எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களும் எமக்கு பிரயோகிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எந்த ஒரு அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கவே இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment