திடீரென்று விண்ணில் மாயமான ஜெட் விமானம் : தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

திடீரென்று விண்ணில் மாயமான ஜெட் விமானம் : தேடும் பணியில் ஜப்பான் ராணுவம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எப்15 ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்ணில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் இன்று (31) மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கிலோமீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமானது.

ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அதனுடன் தரையில் இருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

விமானம் ரேடர் வரையறையை தாண்டி மாயமாகிய நிலையில் அதைத் தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 2019ஆம் ஆண்டு எப்-35 ஏ ஸ்டெல்த் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment