பிரதமர் மஹிந்த இராஜினாமா செய்யும் செய்தியில் உண்மையில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

பிரதமர் மஹிந்த இராஜினாமா செய்யும் செய்தியில் உண்மையில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் இன்றையதினம் (03) இது குறித்து வெளியாகி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை பிழையாக வழிநடத்தும் வகையில் இடம்பெறும் இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை முற்றாக மறுப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment