ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை செவிமடுக்கவில்லை : விமர்சனங்கள் எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்று - மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை செவிமடுக்கவில்லை : விமர்சனங்கள் எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்று - மைத்திரி

(எம்.மனோசித்ரா)

விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அரசியலில் இயல்பானதொரு விடயமாகும். விமர்சனங்கள் என்பவை எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றை நான் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவதில்லை. எனவே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை நான் செவிமடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு - 12 இல் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப் பொங்கல் வைபவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அரசியலில் இயல்பானதொரு விடயமாகும். அது புதுமையானதொரு விடயமல்ல. நாம் அவற்றுக்கு நன்றாக பழக்கப்பட்டுள்ளோம்.

அரசியல்வாதி என்பவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் விமர்சனங்கள் உள்ளாகுபவராவார். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை நான் செவிமடுக்கவில்லை. அவை குறித்து ஆராய வேண்டும்.

எனது பெயர் , பிறந்த நாள், பிறந்த இடம், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பனவே என்னைப்பற்றிய தகவல்களாகும். எனவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதாயின் இவற்றையே வெளிப்படுத்த வேண்டும். விமர்சனங்கள் என்பவை எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றை நான் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவதில்லை என்றார்.

தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தைப் பொங்கல் இந்துக்களுக்கு மாத்திரமின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகும். சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் கிடைக்கும் பண்டிகையாகும்.

பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. அதனை தைப் பொங்கல் பண்டிகையும் உணர்த்துகிறது. தைப் பொங்கலின் பின்னராவது நாட்டின் விவசாயத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட வேண்டும் என்று சூரிய பகவானிடம் பிரார்த்திக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment