இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பானுக ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவினை பானுக ராபக்ஷ ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்கா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே இன்று விளையாட்டுத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் நாமல் ராஜபக்ஷ தனது முடிவினை மீள்பரிசீலனை செய்ய சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment