கொழும்பு கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள முதலைகளைப் பிடிப்பதற்காக புதிய வகை உத்தியொன்றை வனவிலங்கு அதிகாரிகள் கையாண்டுள்ளனர்.
நேற்றைய (11) தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் முதலை இருந்தமையை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமையைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு, முதலை கடலிலிருந்து பேர வாவிக்குள் செல்வதை வனவிலங்கு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
முதலைகளை கவரும் வகையில் இறைச்சித்துண்டு வைக்கப்பட்ட புதிய வகை பொறி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் மேற்படி வாவியின் வாய்க்காலின் இரண்டு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment