ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் 19, 20 இல் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் 19, 20 இல் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிகழ்த்தவுள்ள கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாக உள்ளது.

அது தொடர்பாக கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டு நாள் விவாதத்திற்கு இணக்கம் காணப்பட்டதுடன் அதற்கான திகதியும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாட்கள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை பெற்றுத்தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரால் சபாநாயகரிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. 

அதற்கிணங்கவே நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment