யாழில் பிடிபட்ட 15 அடி நீளமான மலைப்பாம்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

யாழில் பிடிபட்ட 15 அடி நீளமான மலைப்பாம்பு

யாழ்ப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. 

திடீரென சேவல் வித்தியாசமாக சத்தமிடுவதை கேட்டு வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க முற்பட்டுள்ளது. 

இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர்.

கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். விசேட நிருபர்)

No comments:

Post a Comment