முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்திச் செல்ல முற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருப்பதை, அங்கு வேலி அமைப்பதற்காக சென்ற நபர் இனம் காட்டியதைத் தொடர்ந்து, கைவேலி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அதனை இரும்பிற்கு விற்பதற்காக எடுத்துச் செல்லமுற்பட்டுள்ளனர்
நேற்றைய தினம் (௦4) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது குறித்த சந்தேகநபர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோ கிரம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காக கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள் இவர்களை இன்று 05.01.2022 மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ள காணி யுத்தம் முடிந்த காலபகுதியிலிருந்து 12 வருடங்களுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதோடு அண்மையில் காணி உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்க்காக மாவட்ட செயலகத்திடம்இராணுவத்தரப்பால் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment