அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரித்து புதிய சுற்றுநிரூபம் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 6, 2022

அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரித்து புதிய சுற்றுநிரூபம் வெளியீடு

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து பொது நிர்வாக அமைச்சினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய ஓய்வூதிய சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமையானது, அரசியலமைப்பில் அல்லது வேறு சட்டங்களின் ஊடாக ஓய்வு பெறுவதற்கான வயது ஸ்திரமாக்கப்பட்டுள்ளவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் பொதுவானதாகும்.

இந்த சுற்றுநிரூபம் இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment