குவைத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியதாவது, குவைத்தில் தினமும் 50 பேர், மாதம் 1,518 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக வசிப்பவர்களே பெரும்பாலும் நாடு கடத்தப்படுகிறார்கள்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment