இலங்கை தேசிய ஆண்கள் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ளது.
அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2022 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள மூன்று வடிவங்களினாலான தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.
அதன் பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை வரும்.
மேலும் 2022 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி-20 ஆசியக் கிண்ண தொடரிலும் இலங்கை அணி விளையாடும்.
ஆசிய கிண்ணத்தை தொடர்ந்து, 2022 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்கிறது.
பின்னர் இலங்கை அணி 2022 ஆம் ஆண்டிற்கான கடுமையான சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்துடன் டிசம்பரில் நிறைவுக்கு கொண்டு வரும்.
No comments:
Post a Comment