14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் : மீண்டும் பரிந்துரைக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் : மீண்டும் பரிந்துரைக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பெரும்பாலான மக்கள் குணமடைந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தல் கால அளவு குறித்து நாடுகள் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தொற்று முகாமைத்துவ குழுவைச் சேர்ந்த அப்டி மொஹமட் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த நோய்த் தொற்று உள்ள நாடுகளில், நீண்ட தனிமைப்படுத்தல் காலம் தொற்றாளர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க உதவும் என அவர் விளக்கினார்.

எவ்வாறாயினும், தொற்றுகள் குறைவாக உள்ள இடங்களில், நாடுகளை இயங்க வைப்பதற்காக குறுகிய தனிமைப்படுத்தல்கள் நியாயப்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

இன்புளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுவது சாத்தியம். இருப்பினும், இரண்டும் வெவ்வேறு வழிகளில் உடலைத் தாக்கும் தனித்தனி வைரஸ்கள் என்பதால், அவை புதிய வைரஸாக ஒன்றிணைவதில் "சிறிய ஆபத்து" உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின் படி, கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி சுமார் 128 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது.

தென்னாபிரிக்காவில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கூர்மையான அதிகரிப்பு மற்றும் ஒப்பீட்டளவில் விரைவான வீழ்ச்சியைக் கண்டது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

தென்னாப்பிரிக்கா, தொற்றாளர்களின் எண்ணிக்கை கூர்மையான அதிகரிப்பையும் அதைத் தொடர்ந்து ஒப்பீட்டளவில் விரைவான வீழ்ச்சியைளம் கண்டது. வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், மற்ற நாடுகளில் இதே நிலை இருக்காது என மொஹமட் தெரிவித்தார்.

"ஓமிக்ரோன் மாறுபாடு நுரையீரலை விட மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, இது ஒரு நல்ல செய்தி, அதிக ஆபத்துள்ள நபர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் அந்த மாறுபாட்டிலிருந்து இன்னும் மோசமாக நோய்வாய்ப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஒமிக்ரோன் மாறுபாடு சில வாரங்களில் மற்றைய பிறழ்வுகளை முந்திவிடும். குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி போடாதவர்கள் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

டென்மார்க்கில், ஆல்பா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கு இரண்டு வாரங்கள் எடுத்துள்ளது. அதேசமயம் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது. "இதுபோன்ற பரவக்கூடிய வைரஸை உலகம் பார்த்ததில்லை," என்று அவர் தெரிவித்தார்.

நோய்த்தடுப்பு தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக் குழு நிபுணர்கள் ஜனவரி 19 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்யக் கூடுகிறது.

குறித்த கலந்துரையாடலில் பூஸ்டர்களின் நேரம், தடுப்பூசிகளின் கலவை மற்றும் எதிர்கால தடுப்பூசிகளின் கலவை ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment