ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று குறிப்பிட்டு, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.

ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்புகள் எதனையும் அமைப்பதில்லை என்று மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின்படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என்று சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.

No comments:

Post a Comment