இலங்கையில் யானை, மனித மோதல் : கடந்த ஆண்டில் 141 நபர்களும், 369 யானைகளும் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

இலங்கையில் யானை, மனித மோதல் : கடந்த ஆண்டில் 141 நபர்களும், 369 யானைகளும் உயிரிழப்பு

2020 ஆம் ஆண்டை விட யானை மற்றும் மனித மோதலால் கடந்த வருடத்தில் அதிகளவான மனித மற்றும் யானை மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 2021 ஆம் ஆண்டு காட்டு யானை தாக்கி 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 369 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

2020 ஆம் ஆண்டு காட்டு யானை தாக்குதலினால் 112 பேரும், 327 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு யானைகள் அட்டகாசம் மற்றும் காட்டு யானைகளின் வாழ்விடங்களில் மக்கள் குடியமர்த்தப்பட்டமையினால் 2020 ஆம் ஆண்டை விட கடந்த இரண்டு வருடங்களில் யானை மனித மோதலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளது.

காட்டு யானைகளின் மரணங்களில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளினால் ஏற்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.

இதேவேளை கொக்கிப் புழுக்களை உண்டு 68 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும், 65 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், 45 யானைகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், நான்கு யானைகள் விஷம் அருந்தி பலியாகியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment