இலங்கை 2021 இல் 21.6 பில்லியன் டொலரை ஏற்றுமதி வருமானமாக ஈட்டியது - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

இலங்கை 2021 இல் 21.6 பில்லியன் டொலரை ஏற்றுமதி வருமானமாக ஈட்டியது

இலங்கை கடந்த வருடம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது 2020 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளையும் விட அதிகம். 2019 இல் ஏற்றுமதி வருவாய் 19.9 பில்லியன் அமெரிக்க டொலராவும், 2020 இல் ஏற்றுமதி வருவாய் 16.1 பில்லியன் அமெரிக்க டெலராக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment