அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் புதன்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
பிக் பாஷ் லீக் உரிமையாளரான மெல்போர்ன் ஸ்டார்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணித் தலைவரான மெக்ஸ்வெலுக்கு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
தற்சமயம் RT-PCR சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ள அவர், அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அறிக்கை கூறியது.
க்ளென் மெக்ஸ்வெல், கோவிட்-19 தொற்றுக்குள்ளான 13 ஆவது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஆவார்.
No comments:
Post a Comment