பாராளுமன்றத்தில் வெள்ளி, சனி இடம்பெற்ற சம்பவங்களை ஆராய விசேட குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

பாராளுமன்றத்தில் வெள்ளி, சனி இடம்பெற்ற சம்பவங்களை ஆராய விசேட குழு நியமனம்

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை சபாநாயகர் மஹிந்த யாபா நியமித்துள்ளார்.

குறித்த குழுவானது இச்சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை குறித்த குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய - தலைவர்
ரஊப் ஹக்கீம்
எம்.ஏ. சுமந்திரன்
சமல் ராஜபக்ஷ
பந்துல குணவர்தன
வாசுதேவ நாணயக்கார
சுசில் பிரேமஜயந்த
கயந்த கருணாதிலக
அநுர பிரியதர்ஷன யாபா
விஜித ஹேரத்
ரஞ்சித் மத்துமபண்டார

குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பிக்கள் கடந்த சனிக்கிழமை (04) பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததோடு, கடந்த 3 தினங்களாக அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் நேற்று (07) சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து இன்று (08) அவை நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment