வீடுகள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுமாறு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்திற்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பணிப்புரை விடுத்துள்ளது.
டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத லிட்ரோ சமையல் எரிவாயு (நீல) சிலிண்டர்களையே இவ்வாறு மீளப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது லிட்ரோ நிறுவனத்தினால் புதிதாக வெளியிடப்படும் சிலிண்டர்களின் வாயானது, வெள்ளை நிற பின்புலத்தில் சிவப்பு நிற சின்னத்தை கொண்ட பொலித்தீனினால் சீலிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட சிலிண்டர்களின் வாயானது, நீல நிற பொலித்தீனினால் சீலிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment