ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு பரவல் அச்சத்தில் உலக நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடும் நேரத்தில் பீஜி வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறக்கவுள்ளது.
இன்று டிசம்பர் முதலாம் திகதி முதல் பீஜி அதன் எல்லையைச் சுற்றுப் பயணிகளுக்குத் திறந்து விடுவதாக அந்நாட்டுப் பிரதமர் பிராங்க் பைனிமரமா தெரிவித்தார்.
டிசம்பர் 1ஆம் திகதி நாட்டின் எல்லையைத் திறப்பது குறித்து நீண்டநாள் திட்டமிட்டு வந்தது பீஜி. இன்று காலை அவுஸ்திரேலியாவிலிருந்து முதல் விமானம் பீஜிக்கு வருகிறது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் மட்டுந்தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.
பயணிகள் அவர்களது பயணங்களுக்கு முன் கொவிட்-19 பரிசோதனை செய்து நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பயணத்துறையை அதிகம் சார்ந்துள்ள பீஜிக்கு கொவிட்-19 நோய்த்தொற்றால் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட பீஜி முதலாம் அலை நோய்த் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய நிலையில் டெல்டா திரிபின் இரண்டாவது அலை காரணமாக 700 உயிரிழப்புகள் பதிவாகின.
No comments:
Post a Comment