வாரத்திற்கு நான்கரை நாள் வேலை : ஜனவரி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

வாரத்திற்கு நான்கரை நாள் வேலை : ஜனவரி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுல்

2022 ஜனவரி 1 முதல் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறைமையினை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை அரை நாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய ரீதியில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை என்பதை விடவும் குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் மாறியுள்ளது.

வேலை வாரம் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகலுடன் முடிவடையும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, ஒரு நாளைக்கு 8 1/2 வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஊழியர்கள் 4 1/2 மணி நேரம் வேலை செய்வார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த நடவடிக்கை தொழில் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment