இலங்கையில் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் : ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கிறார் அசேல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

இலங்கையில் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் : ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கிறார் அசேல குணவர்த்தன

கொரோனா வைரஸின் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டுவதை சுகாதார அமைச்சு அவதானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.

மக்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தால் அது மிகவும் ஆபத்தானதாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

ஒமிக்ரோன் உலகளவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒரு தருணத்தில் பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமானதென்றும் அவர் மேலும் கூறினார்.

தகுதியுள்ள எந்தவொரு நபரும் பூஸ்டர் தடுப்பூசியை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இது கொரோனா வைரஸைத் தடுக்கவும் வைரஸுக்கு மக்கள் அடிபணிவதைத் தடுக்கவும் உதவுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, ஒமிக்ரோன் உலகளவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒரு தருணத்தில் பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமாகும்.

இல்லையெனில், நாட்டில் நிச்சயமற்ற தன்மையை அது உருவாக்கும் விடயங்கள் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment