முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை கடந்த டிசம்பர் 15ஆம் திகதி முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்றையதினம் (18) மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 13 வயதுடைய மூங்கிலாறு பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி, திருகோணமலையில் விடுதியொன்றி தங்கி படித்து வந்துள்ளதுடன், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளது
சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே காணப்படுகிறது சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாங்குளம் நிருபர்
No comments:
Post a Comment