யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி கடமையேற்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி கடமையேற்பு

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின்‌ கட்டளைத்‌ தலைமையகத்தின்‌ 27ஆவது கட்டளைத்‌ தளபதியாக மேஜர்‌ ஜெனரல்‌ DGS செனரத்‌ யாபா (RWP RSP ndu) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்‌ கொண்டார்‌.

நேற்றையதினம் (17) சுப வேளையில்‌ அனைத்து மத வழிபாடுகளுடனும்‌ சம்பிதாயபூர்வமாக கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது இராணுவ அணிவகுப்பும்‌ இராணுவ மரியாதைகளும்‌ வழங்கப்பட்டதுடன்‌ இந்நிகழ்வைக் குறிக்கும் முகமாக கட்டளைத்‌ தளபதியினால்‌ பாதுகாப்பு படைகளின்‌ தலைமையகத்தின்‌ முன்‌ பகுதியில்‌ மரக்கன்று ஒன்றும்‌ நடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மரணமடைந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும்‌ முகமாக மலர்‌ அஞ்சலி‌ செலுத்தியதுடன்‌ அனைத்து இராணுவ அதிகாரிகள்‌ முன்னிலையிலும்‌ தனது ஆரம்ப உரையினை அவர் வழங்கியிருந்தார்‌.

இந்‌நிகழ்விற்கு படைத்‌ தளபதிகள்‌, படைப்பிரிவுத்‌ தளபதிகள்‌ இராணுவ உயரதிகாரிகள்‌ மற்றும்‌ இராணுவ வீரர்கள்‌ கலந்து கொண்டிருந்தனர்‌.

No comments:

Post a Comment