பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறையில் ஆணொருவரின் சடலமொன்றினை இன்று சனிக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பசறை நகரிலிருந்து மடுல்சீமைக்கு செல்லும் வழியில் 'கள்' போதைப் பானம் விற்பனை செய்யும் இடத்திற்கு செல்லும் வழியிலேயே, மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அம்புலன்ஸ் வண்டி ஊழியர்கள் விழுந்து கிடந்த நபரை பரிசோதனை செய்த போது, அந்நபர் இறந்துள்ளமை ஊர்ஜிதமாகியது.

இதைத் தொடர்ந்து பசறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும், பொலிஸார் குறிப்பிட்ட சடலத்தை மீட்டு, வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.

மரணமடைந்தவரின் சட்டைப் பைக்குள் இருந்த மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டு ஒன்றை, பொலிஸார் மீட்டபோது, அப்பற்றுச் சீட்டில் புகுல்வத்தை என்று குறிப்பிட்டிருந்தபடியினால், இறந்த நபர் புகுல்வத்தைப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர். 

இந்நபர் 65 வயதை மதிக்கத்தக்கவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தை அடையாளம் காணுமாறு, பசறைப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். இந்நபர் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment