தாய்லாந்திலும் பரவியது ஒமிக்ரோன் வைரஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

தாய்லாந்திலும் பரவியது ஒமிக்ரோன் வைரஸ்

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒமிக்ரோன் என்ற புதிய வகை திரிபாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த ஒமிக்ரோன் திரிபு மற்ற வைரசை ஒப்பிடும் போது மிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உட்பட உலகின் 46 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், 47ஆவது நாடாக ஒமிக்ரோன் வைரஸ் தற்போது தாய்லாந்திலும் பரவியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த மாதம் 29ஆம் திகதி தாய்லாந்து வந்த 35 வயது நிரம்பிய அமெரிக்கருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தாய்லாந்தில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடரில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதனை தொடர்ந்து, ஒமைக்ரான் பரவிய நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவரை தாய்லாந்து சுகாதாரத்துறை தீவிர கண்காணித்து வருகிறது.

No comments:

Post a Comment