வட மேல் மாகாண ஆளுநர் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார். மரணிக்கும் போது அவருக்கு 83 வயதாகும்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே காலமாகியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரேவை நீக்க அக்கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியமை மற்றும் அப்பதவிக்கு மற்றுமொரு தலைவரை நியமிப்பதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment