இன்று (18) இரவு 11.00 மணி முதல் நாளை (19) காலை 8.00 மணி வரை கொழும்பின் சில பகுதிகளில் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 09 (தெமட்டகொடை) கொழும்பு 10 (மருதானை), கொழும்பு 11 (புறக்கோட்டை), கொழும்பு 12 (வாழைத்தோட்டம்), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை), கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுமென சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் தொடர்பில் வருந்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment