தமிழ் நாட்டின் குன்னூரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கப்டன் வருண் சிங்கின் உடலுக்கு மத்தியப் பிரதேசத்தில் இராணுவ மரியாதையோடு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை குரூப் கப்டன் வருண் சிங் பெங்களூர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குன்னூர் அருகே ஹெலிகொப்டர் விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்திருந்த ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங் ஆவார்.
ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருடைய சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. கடந்த 15ம் திகதி வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் யேலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வருண்சிங்கின் சொந்த ஊரான மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வருண்சிங் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஏற்கனவே பெங்களூர், போபால் ஆகிய இடங்களில் இராணுவ மரியாதை மற்றும் அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநில அரசு பணி அளிக்கும் என்றும் ஒரு கோடி ரூபா அவரது குடும்பத்திற்கு உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
அதன் பிறகு அவரின் சொந்த ஊரிலே இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
முழு இராணுவ மரியாதையுடன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
குன்னூர் இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விமானப்படை குரூப் கப்டன் வருண் சிங் உடல் நேற்று போபாலில் முழு இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment