யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர்கள் வெடித்துச் சிதறிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்று முன்தினம் லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முற்பட்டபோது, லைட்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதேவேளை நேற்று முன்தினம் சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதும், லைட்டர் வெடித்துள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புக்கள் வெடிப்புச் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment